வேலைக்கு விண்ணப்பம் தயார் செய்வது எப்படி? How to prepare a job application?
கம்பெனிகளில் நேரடியாகவோ ஆன்லைன் (கம்ப்யூட்டர்)வழியாகவோ வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு நமது படிப்பு,தொழில் தகுதி, தொடர்பு முகவரி முதலான குறிப்புகள் அடங்கிய சுய விவரக்குறிப்பேடு (curriculum vitae அல்லது CV என்று சுருக்கமாக குறிப்பிடுவார்கள் ) தயார் செய்வது வேலை தேடுவதின் முதல் படியாகும்.
CV யில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பின் வருமாறு
1. விண்ணப்பம் செய்பவரின் பெயர், தொடர்பு எண், ஈ -மெயில் முகவரி மற்றும் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் ஆகிய தகவல்கள் CV யின் header எனப்படும் தலைப்பு பகுதியில் இடம் பெற வேண்டும்.
2. அதற்கு அடுத்து ஒரு வெள்ளை நிற பின்புலம் கொண்ட வண்ணப்புகைப்படம் ஒன்று இடம்பெற வேண்டும்.
3.அடுத்ததாக வேலைக்கான குறிக்கோள் (career objective) குறித்து சுருக்கமாக இரண்டு மூன்று வரிகளில் எழுத வேண்டும்.
4.பணி அனுபவம் உள்ளவர்கள், பணியின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் ( job duties and responsibilities) என்று தலைப்பிட்டு, தங்கள் வேலையின் முக்கிய அம்சங்களை விரிவாக எழுத வேண்டும்.அதிகபட்சம் CV யில் 50% சதவீத இடத்தை இதற்கு வழங்கலாம், ஏனெனில் CV யில் மிக முக்கிய பகுதியாகும். அதேவேளை CV மூன்று பக்கங்களுக்கு மிகாமலும் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியும் இருந்தால் சிறப்பு.
5.அடுத்த பகுதி தாங்கள் முன்னர் செய்த வேலைகளின் பெயர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் விவரங்கள் மற்றும் கால அளவு குறிப்பிடுதல் வேண்டும். இதற்கு 'Previous job history ' என்று தலைப்பிட வேண்டும்.
6. அடுத்து கல்வித்தகுதி குறிப்பிட வேண்டும், இதற்கு 'Educational qualification' அல்லது 'Academic qualification ' என்று தலைப்பிட வேண்டும்.
7. அடுத்த பகுதி 'Special Skills' எனப்படும் உங்களுடைய தனித்திறமைகள் மற்றும் மொழியறிவு முதலானவற்றை குறிப்பிடலாம்.
8.அடுத்து ' Computer skills' எனப்படும் கணினி சார்ந்த உங்களுக்கு தெரிந்த திறமைகளை குறிப்பிடலாம், உதாரணமாக MS word, Excel போன்றவை.
9.இறுதியில் 'Declaration' பகுதியும் அடுத்து விண்ணப்பம் செய்பவரின் பெயர், இடம், தேதி குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக