இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துபாயில் பொறியியல் மற்றும் பராமரிப்பு துறையில் அதிக வேலைவாய்ப்பு தரும் ஐ டி ஐ படிப்புகள்!

ஐடிஐ தொழில் பயிற்சி நிலையங்களில் ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் படிக்கக்கூடிய படிப்புகள் வரை பல வகையான படிப்புகள் இருந்தாலும், அவற்றில் துபாயில் பிரபலமான அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் படிப்புகள் 1. ஏ. சி மெக்கானிக்  2.எலக்ட்ரிசியன் 3.பிளம்பர்  4.ஆட்டோமொபைல் மெக்கானிக் 5.எலக்ட்ரானிக் டெக்னிசியன் 6. ஆட்டோ எலக்ட்ரிசியன் இதை தவிர மற்ற படிப்புகளுக்கு வேலைகள் இருந்தாலும் பரவலாக அதிக  எண்ணிக்கையில் தொழிலாளர்கள்  பணிபுரியும் சேவை துறையில் மேற்கண்ட தொழில் படிப்புடன் குறைந்தது ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு பணி நேர்முகத்தேர்வில் முன்னுரிமை வழங்குவார்கள்.

வேலைக்கு விண்ணப்பம் தயார் செய்வது எப்படி? How to prepare a job application?

 கம்பெனிகளில் நேரடியாகவோ ஆன்லைன் (கம்ப்யூட்டர்)வழியாகவோ வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு நமது படிப்பு,தொழில் தகுதி, தொடர்பு முகவரி முதலான குறிப்புகள் அடங்கிய சுய விவரக்குறிப்பேடு (curriculum vitae அல்லது CV என்று சுருக்கமாக குறிப்பிடுவார்கள் ) தயார் செய்வது வேலை தேடுவதின் முதல் படியாகும். CV யில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பின் வருமாறு 1. விண்ணப்பம் செய்பவரின் பெயர், தொடர்பு எண், ஈ -மெயில் முகவரி மற்றும் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் ஆகிய தகவல்கள் CV யின் header எனப்படும் தலைப்பு பகுதியில் இடம் பெற வேண்டும். 2. அதற்கு அடுத்து ஒரு வெள்ளை நிற பின்புலம் கொண்ட வண்ணப்புகைப்படம் ஒன்று இடம்பெற வேண்டும். 3.அடுத்ததாக வேலைக்கான குறிக்கோள் (career objective) குறித்து சுருக்கமாக இரண்டு மூன்று வரிகளில் எழுத வேண்டும். 4.பணி அனுபவம் உள்ளவர்கள், பணியின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் ( job duties and responsibilities) என்று தலைப்பிட்டு, தங்கள் வேலையின் முக்கிய அம்சங்களை விரிவாக எழுத வேண்டும்.அதிகபட்சம் CV யில் 50% சதவீத இடத்தை இதற்கு வழங்கலாம், ஏனெனில் CV யில் மிக முக்கிய பகுதியாகும். அதேவேளை CV...

துபாயில் வேலை தேடுவது எப்படி? How to find a job in Dubai?

 அரபு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாய், அபுதாபி போன்ற நகரங்களில் இருந்து வேலை தேடிக்கொண்டு இருக்கும் தமிழர்களுக்கு எனது அனுபவத்தில் இருந்து வேலை தேடிடும் செயல்முறைகளை இறைவன் நாடினால் சொல்லித்தரப்போகிறேன். வேலை தேடிடும் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கும் ஆனால் அதற்கு திட்டமிட்டு செயல்படுபவர்கள் ஒரு பகுதியினரே! இன்னும் சிலர் ஆவலோடு உழைக்கும் ஆற்றலும் வெளிப்படுத்துவர் ஆனால் அவர்களுக்கு வேலை தேடிடும் நுணுக்கங்கள் தெரியாமல் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.விசயத்திற்கு வருவோம் வேலை தேடுவதை பின்வருமாறு வகைப்படுத்தலாம் 1.கணினியில்(கம்ப்யூட்டர்)வேலைகளை தேடுவது 2. உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் மூலம் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் வேலை தேடுவது 3. நேரடியாக பெரிய நிறுவனங்களுக்கு சென்று வேலைக்கு விண்ணப்பம் கொடுப்பது. மேற்கண்ட மூன்றுமே முக்கியத்துவம் வாய்ந்தது அதிலும் சமீப காலங்களில் கணினி வழியில் வேலை தேடுவது முக்கியத்துவம் பெற்று வருகிறது,அது எப்படி என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம். நன்றி! வேலைக்கு விண்ணப்பம் தயார் செய்வது எப்படி? ?...